பொதுவாக, இப்படி தாதுப்பொருட்கள் குழாய்களில் படிவதால் உடல்நல பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், நீர் வரத்தை அது பாதிக்கும். கீழ்க்கண்ட எளிதான 3 ஸ்டெப்களை பின்பற்றி குழாய்களில் ஏற்படும் கறையை அகற்றிடுங்கள்.
- Home
- குளியலறையை சுத்தம் செய்தல்
- கடின நீர் காரணமாக உங்கள் வீட்டுக்குழாய்களில் கறை ஏற்படுகிறதா? அவற்றை மீண்டும் பளபளப்பாக மாற்ற இதோ ஒரு எளிய வழி!
கடின நீர் காரணமாக உங்கள் வீட்டுக்குழாய்களில் கறை ஏற்படுகிறதா? அவற்றை மீண்டும் பளபளப்பாக மாற்ற இதோ ஒரு எளிய வழி!
கடினமான நீர் ஆவியாகும்போது, அதில் உள்ள சுண்ணாம்பு உள்ளிட்ட தாதுப்பொருட்கள் குழாய்களில் படிந்துவிடுகின்றன. இவைதான், உங்கள் குழாயில் ஏற்படும் வெள்ளை நிற, கடினமான அழுக்குக் கறைகளாகும்.
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது
పంచుபகிர்కోండి
ஸ்டெப் 1:
சுத்தம். வீரியமான வினிகரை, ஸ்பிரே பாட்டில் மூலமாக, குழாய் மேல் தெளித்துவிடுங்கள். இல்லை எனில், அரை கப் எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை குழாய் மேல் தெளித்துவிடுங்கள். இது நல்ல வாசனை தரக்கூடும்.
ஸ்டெப் 2:
காத்திருங்கள். இந்த வினிகர் அல்லது எலுமிச்சை சாறு தெளித்ததும், கறையின் தன்மையை பொறுத்து 15 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள்.
ஸ்டெப் 3:
துடையுங்கள். கறை இருக்கும் பகுதியை இப்போது நன்கு அழுத்தி துடையுங்கள். அதேசமயம், கடினமான தேய்ப்பான் எதையும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், குழாய் மீது கீறல், சிராய்ப்புகள் ஏற்பட்டு விடும்.
இவ்வளவுதான். செய்வதற்கு விரைவானது மற்றும் ரொம்ப எளிதானது.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது