தினமும் பாத்ரூமை சுத்தம் செய்யும்போது பல பிரச்சினைகளை நீங்கள் சந்திக்கிறீர்கள். இதற்கு நங்கள் ஒரு தீர்வைத் தருகிறோம் - அதுதான் டிஸ்டில்டு வினிகர்! ஆம், பல பிரச்சினைகளைத் தீர்க்க வினிகரைப் பயன்படுத்தலாம்.
பின் வரும் வகையில் வினிகரைப் பயன்படுத்தி பாத்ரூமின் பிரச்சினைகளைத் தீருங்கள்!
வினிகரை ஒரு போதும் ப்ளீச்சுடன் சேர்க்க கூடாது:
சுத்தம் செய்வதற்கு இந்த முறையை கையாளவே கூடாது. மேற்புறங்கள் மற்றும் ஃபிக்சர்களை சுத்தம் செய்ய பல நிலைமைகளில் வினிகர் உதவினாலும், இது போன்ற ஆசிடை ப்ளீச்சிங் பவுடருடன் சேர்ப்பதால் குளோரின் வாயு வெளி வரும். இது நச்சுத் தன்மை கொண்டது. ப்ளீச்சை வினிகரிலிருந்து விலக்கி வைக்கவும்.
சுத்தம் செய்வதற்கு வினிகர் இயற்கையான கரைசல் என்றாலும், இதை பயன்படுத்தும்போது நீங்கள் ரப்பர் கையுறை அணிய வேண்டும், அறையையும் காற்றோட்டமாக வைக்க வேண்டும். ஏனென்றால் இதில் மிக கடுமையான நெடி இருக்கிறது.
இந்த முறைகளைப் பயன்படுத்தி உங்கள் பாத்ரூமை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் சுத்தம் செய்யுங்கள்.