கடினமான நீர், வெள்ளை நிற உடைகளை பாதுகாப்பதற்கு, பெரும் சவாலாக உள்ளன. கடின நீரில் கலந்துள்ள ரசாயனப் பொருட்கள், டிடர்ஜென்ட் உடன் வினைபுரிந்து, வெள்ளை உடையை மஞ்சளாக மாற்றி விடுகின்றன.

  • பிளீச் அரை பக்கெட் வெந்நீரில், நான்கில் ஒரு பகுதி அளவுக்கு பிளீச் பவுடர் கலக்க வேண்டும். அதில், 10 நிமிடங்கள் உங்களின் வெள்ளை உடைகளை ஊற வையுங்கள். பிளீச் பவுடரில் கை வைக்கும்போது, மறக்காமல் ரப்பர் உறையை கைகளுக்கு அணிய வேண்டும். பின்னர் உடையை அலசி, துவைக்க வேண்டும், தேவைப்பட்டால் மீண்டும் செய்யவும்.
  • அம்மோனியா ஒரு கப் அம்மோனியா மற்றும் ஒரு கப் விம் டிஸ்வாஷ் லிக்யூட்டை ஒரு பக்கெட்டில் ஊற்றி, அதை டூத் பிரஷ் வைத்து கலக்க வேண்டும். அதில், உடையின் கறை படிந்த பகுதியை 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பின், துணியை டூத் பிரஷ் உதவியுடன் தேய்த்து, நீரில் அலசியெடுக்க வேண்டும்.
  •  பெராக்ஸைடு ஒரு பங்கு நீர் மற்றும் ஒரு பங்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடு (துணியின் அளவுக்கு ஏற்ப) கலக்க வேண்டும். அதில், வெள்ளை நிற உடையை அதில், 30 நிமிடங்கள் ஊற வைத்து, அலசி எடுங்கள். திரும்பவும் துவையுங்கள். தேவைப்பட்டால், இதை மறுபடியும் செய்யுங்கள்.