தினமும் புதுப்புது ஆடைகள் வாங்குவது இயலாத விசயம். எனவே, குழந்தைகளின் ஆடை புதியதாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டுமெனில், துவைக்கும்போது வீட்டிலேயே நீங்கள் செய்ய வேண்டிய சில குறிப்புகள் இதோ.

  • வினிகர். அரை கப் வினிகர் மற்றும் வெந்நீர் கலந்த கலவையில், துணிகளை ஊறவையுங்கள். வினிகர் கறைகளை நீக்குவதோடு, துணியில் உள்ள துர்நாற்றத்தை அகற்றுகிறது.
  • ஹைட்ரஜன் பெராக்ஸைடு. ஒரு பங்கு சர்ஃப் எக்ஸல் லிக்யூட் வாஷ், 2 பங்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடு, 1 தேக்கரண்டி சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை கறை உள்ள பகுதிகளில் தேய்க்க அல்லது தெளிக்க வேண்டும். 5 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை இவற்றை உலர விட்டு, பின்னர் துணிகளை துவைக்க வேண்டும்.
  • போரக்ஸ் + பேபி சோப். ஒரு தேக்கரண்டி போரக்ஸ் பவுடர் மற்றும் பேபி சோப் ஆகியவை கலந்த நீரில், துவைக்கும் துணிகளை ஒருமுறை அலசி எடுங்கள்.