விளம்பரம்
Buy Comfort Super Sensorial

நம்மிடம் உள்ள கம்பளி துணிகளை ரோஜா மணம் கமழ செய்வது எப்படி?

கம்பளி துணிகளில் புழுங்கிய வாடை வராமல் தடுப்பது எப்படி? கீழே காண்போம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Make Your Stored Woollens Smell like Roses

குளிர்காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் கம்பளித்துணிகள் மற்ற காலங்களில் அலமாரியில் தூங்குகின்றன. இவ்வாறு உபயோகப்படுத்தாமல் பல நாட்கள் உள்ளே அடைந்து இருப்பதால் புழுங்கிய வாடை வந்துவிடுகின்றது. கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்றி , அடுத்த குளிர்காலம் வரை,கம்பளித்துணிகளில் நறுமணம் கமழ செய்வது எப்படி என்பதை காணலாம்.

Step 1: மென்மையான சோப்புத்தூள் கொண்டு சலவை செய்ய வேண்டும்

குளிர் காலங்களில் பயன்படுத்தப்படும் கம்பளிகளில், தூசு ,மாசு படிந்து இருக்கக்கூடும். எனவே குளிர்காலம் முடிந்ததும் அவற்றை மென்மையான சோப்புத்தூள் கொண்டும், துணி மென்மைபடுத்தும் திரவம் கொண்டும் வழக்கமான முறையில், இயந்திரத்தில் சுழற்றி சலவை செய்யவும். இயந்திரத்தில் போடும் முன் கவனிப்பு சீட்டை ஆராய்ந்து கொள்ளவும்.

Step 2: வெயிலில் உலர்த்தல்

சலவை செய்த துணியை, சூரிய ஒளியில் நன்றாக உலர்த்த வேண்டும். உங்கள் கம்பளிகளை சுருங்கச் செய்து விடும் என்பதால் வாஷரில் உலர்த்துவதை தவிர்க்கவும். நுண்கிருமிகள் ஏதேனும் இருந்தால் அழிந்து விடும்.

விளம்பரம்

Buy Comfort Super Sensorial

Step 3: ஒரு ஜிப் லாக் பையில் வைக்கவும்

உங்கள் கம்பளி ஆடைகளை வைக்குமளவுக்கு ஒரு ஜிப் லாக் பையை எடுக்கவும். ஆடைகள் நன்றாக உலர்ந்தப் பிறகு அவற்றை மடித்து இந்தப் பையில் வைக்கவும். 

Step 4: வாசனை சேர்க்கவும்

உங்கள் கம்பளி ஆடைகளைக் கொண்ட பையில் சில ரோஸ்மேரி அல்லது சிடார் இலைகளைச்சேர்க்கவும். உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெயை உள்ளே தெளிக்கலாம் அல்லது இலவங்கப்பட்டை அல்லது கிராம்பு குச்சிகளை பையில் வைக்கலாம். உங்கள் கம்பளி உடைகள் நல்ல வாசனையோடு இருக்க நீங்கள் விரும்பும் நறுமணத்தைத்தேர்ந்தெடுங்கள்.

Step 5: மூடி வைத்தல்

காற்றுப்புகாத பைகளில் கம்பளிகளை நன்கு மூடிவைக்கவேண்டும். காற்று ஏதேனும் இருப்பின், அதை அழுத்தி வெளியேற்றிய பிறகு மூடிவைக்கவேண்டும்.  அலமாரியில் பத்திரமாக எடுத்துவைக்கப்படும் இந்த கம்பளி, இனி புதிதுபோல் இருப்பதுடன் நம் விருப்பமான மணத்தையும் கொண்டிருக்கும்.

மேற்கண்ட செய்முறைகளால் கம்பளி எப்பொழுதும் நறுமணத்தோடு இருக்கும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது