விளம்பரம்
Buy Comfort Super Sensorial

புடவைகளிலிருந்து ஹென்னா கறையை அகற்றுவது ஒரு கடினமான வேலை. இனிமேல் அது கடினமில்லை! கறையை அகற்றுவதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கு காணலாம்!

ஹென்னா வடிவமைப்பு உங்களின் கைகளில் அழகாக இருக்கும், ஆனால் அதன் கறைகள் ஆடைகள் மீது படும்போது அழகாகாது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

removing-henna-stains-from-sarees-can-be-a-tough-job-not-anymore-here-are-some-simple-steps-for-a-quick-fix

ஒருவேளை உங்கள் துணிகளில் ஹென்னா கறைகள் பட்டுவிட்டால், அது துணியின் நிறத்தை பாதிப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதை போக்க, கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்; இந்த வழிமுறை ஏற்கனவே முயற்சி செய்து, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மிக அண்மையில் பட்ட ஹென்னா கறையை எளிதாக நீக்கி விட முடியும். எனவே, முடிந்தவரையில் கறைபட்ட வெகு விரைவில் அதை போக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

படி 1:

குளிர்ந்த நீர். கறைபட்ட இடத்தை குளிர்ந்த தண்ணீரில் நன்றாக நனைத்துக் கொள்ளவும், பின்னர் துணியின் இரு பக்கங்களிலும், பாத்திரத்தை கழுவ பயன்படுத்தும் திரவத்தை கொண்டு நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.

விளம்பரம்

Buy Comfort Super Sensorial

படி 2:

கறைகளில் கொஞ்சம் வினிகரை ஊற்றவும், அதை உங்கள் விரல்களை கொண்டு கறை பகுதியில் தடவி விடவும். அதை சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும்.

படி 3:

கறை இருக்கும் இடத்தில், சில துளி ஹைட்ரஜன் பெராக்சைடு ஊற்ற வேண்டும். உங்கள் துணியை வெளுக்கச் செய்வதற்காக பயன்படுத்தும் பெராக்சைடு ஊற்றும் போது கவனமாக இருக்க வேண்டும்.

படி 4:

இதன்பிறகும், உங்களின் துணியில் கறை இருக்கும் தடங்கள் தென்பட்டால், கொஞ்சம் ஆல்கஹால் கொண்டு கறை இருக்கும் இடத்தை தேய்க்கவும்.

Step 5:

துணிகளை உலர வைத்து, பின்னரே வாஷிங்மெஷில் துவைக்க வேண்டும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது