ஜிம் உடைகள் வியர்வை உறிஞ்சக்கூடிய துணியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவை உங்களுக்கு வசதியாக உடற்பயிற்சி செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜிம் துணிகளில் இருந்து வரும் வாடைக்காக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டாம். தீவிர உடற்பயிற்சி அமர்வுகளுக்குப் பிறகும், உங்கள் ஜிம் துணிகளை புதிய வாசனையுடன் வைத்திருக்க இந்த எளிய தந்திரங்களைப் பயன்படுத்தலாம்.
- Home
- கிளாத்திங் கேர்
- உங்கள் ஜிம் துணிகளை புதிய வாசனையோடு வைத்திருக்க ஸ்மார்ட் டிப்ஸ்
உங்கள் ஜிம் துணிகளை புதிய வாசனையோடு வைத்திருக்க ஸ்மார்ட் டிப்ஸ்
கச்சிதமான உடலைப் பெற வாரத்திற்கு மூன்று முறையாவது ஜிம்மிற்கு போக வேண்டும். உங்கள் ஜிம் துணிகளை புதிய வாசனையுடன் வைத்திருக்க, இந்த எளிய உதவிக்குறிப்புககள் மற்றும் உத்திகள் முயற்சிக்கவும்.
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது
పంచుபகிர்కోండి
படிநிலை 1 : வினிகரில் ஊற வைக்கவும்
1/2 வாளி குளிர்ந்த தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது, உங்கள் ஜிம் துணிகளை இந்த கரைசலில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதற்குப் பிறகு, நீங்கள் வழக்கம்போல உங்கள் துணிகளைக் கழுவலாம். உங்கள் ஜிம் ஆடைகளிலிருந்து உடல் நாற்றத்தை அகற்ற வினிகர் உதவுகிறது.
படிநிலை 2 : தவறாமல் கழுவவும்
முடிந்தால், ஒவ்வொரு ஒர்க்அவுட் அமர்வுக்குப் பிறகும் உங்கள் ஜிம் துணிகளைக் கழுவ வேண்டும். இது உங்கள் துணிகளை சுத்தமாகவும், புதிய வாசனையுடனும் வைத்திருக்கும்.
படிநிலை 3 : காற்றோட்டம் மிகுந்த இடத்தில் வைக்கவும்
நீங்கள் நேரமின்மை காரணமாக, வாரத்திற்கு பல முறை துணிகளைக் கழுவுவது கடினம் எனில், உங்கள் ஜிம் துணிகளை நன்கு காற்றோட்டமான இடத்தில் தொங்க விடுங்கள். இது வியர்வை, துர்நாற்றம் நீங்க உதவும்.
படிநிலை 4 : சரியான அளவில் சவர்க்காரத்தை பயன்படுத்துங்கள்
உங்கள் ஜிம் துணிகளைக் கழுவும்போது நிறைய சலவைத்தூள் சேர்ப்பது பொதுவான தவறு. அதிக சவர்க்காரத்தைப் பயன்படுத்துவது உங்கள் உடற்பயிற்சி துணிகளை சுத்தமாக்காது, மாறாக சோப்பு கசடு திரண்டு துணியில் வியர்வையின் வாசனையைப் அதிகரிக்கும். உங்கள் வாடையான ஜிம் துணிகளைக் கழுவ சரியான அளவு சோப்பு பயன்படுத்தவும், அப்பொழுதுதான் உங்கள் துணிகள் நன்றாக இருக்கும்.
படிநிலை 5 : துணி மென்மையாக்கலிலிருந்து விலகி இருங்கள்
துணி மென்மையாக்கிகள் உங்கள் நீட்சியடையும் ஜிம் ஆடைகளின் வடிவத்தை அழித்து, உங்கள் துணிகளில் ஒரு பூச்சை உண்டாக்கும். துணி மென்மையாக்கிகளின் பயன்பாடு எதிர் வினையாற்றும், ஏனெனில் அவை உங்கள் வாடையான ஜிம் ஆடைகளில் துர்நாற்றத்தை அடைத்து வைக்கும்.
அவ்வளவுதான்! வாடை வீசும் ஜிம் உடைகள் இப்போது ஒருபோதும் உடற்பயிற்சியை தவிர்க்க ஒரு காரணமாகாது.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது