விளம்பரம்
Buy Domex

உங்கள் குழந்தைகளின் பள்ளி பைகளை, நறுமணம் மிக்க ஒன்றாக மாற்றும் எளிய வழிமுறைகள்

பள்ளி முடிந்து வரும் உங்கள் குழந்தைகள் பெரும்பாலும் துர்நாற்றம் வீசக்கூடிய காலுறைகளையும் உணவு துணுக்குகள் கிடக்கும் பள்ளிபைகளையும் கொண்டிருப்பார்கள். குழந்தைகளுடைய பள்ளிப்பைகளை எவ்வாறு மணம் கமழ செய்வது?

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Easy Steps to Add a Fresh Fragrance to Your Kids’ School Bags

உங்கள் குழந்தைகள் எல்லாப்பொருட்களையும் பள்ளிபைக்குள்  திணிக்கும் பழக்கம் கொண்டவர்களா? அவ்வாறு இருப்பின் எப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்கும்?

கவலையை விடுங்கள். மிகவும் எளிமையான சிறப்பான வழியில் நாற்றத்தை அகற்றி பைகளை நறுமணம் கமழ செய்யமுடியும்.

உங்கள் குழந்தைகளின் பள்ளிப்பைகளை சுத்தம் செய்து அவற்றில் நறுமணம் கமழச் செய்ய , கீழ்க்காணும் வழிகளைப்பின்பற்றவும்.

Step 1:  பையை காலியாக்கவும்:

முதலில் எல்லாபொருட்களையும் ஒன்றுவிடாமல் வெளியேஎடுக்கவும். பையிலுள்ள எல்லா பாக்கெட்களையும் காலி செய்வதை நினைவில் வையுங்கள்.

Step 2: சுத்தம் செய்யவும்:

ஒரு கிண்ணம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பாத்திரம் கழுவும் திரவம் சேர்த்து தூரிகை கொண்டு நன்கு தேய்க்கவும். ஒரு சில நிமிடங்களுக்கு தேய்க்கவும். பின்நனைந்த துணியால் சோப்பை நன்கு துடைத்து எடுக்கவும்.

விளம்பரம்

Buy Domex

Step 3:  பையை கழுவுதல்:

இயந்திரத்தில் துவைக்கும் முன் பராமரிப்பு சீட்டை நன்கு ஆராயவேண்டும். இயந்திரத்தில் துவைக்கக்கூடிய பை என்றால்,  துணி துவைக்கும் இயந்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி ஒரு தேக்கரண்டி சோப்புத்தூள் கலந்து வைக்கவும். இயந்திரத்துடன் வரும் அளவீட்டை பயன்படுத்தவும். இயந்திரத்தில் துவைக்கக் கூடாது என்றால்,  ஒருவாளி வெதுவெதுப்பான நீரில் 2 தேக்கரண்டி சோப்புத்தூளை சேர்த்து தூரிகை கொண்டு தேய்த்து கழுவவும். பையின் சில பாகங்கள் மென்மையாக இருந்தால் நீங்கள் ஒரு பஞ்சை பயன்படுத்தி துடைத்து, சிங்க்கில் பையை, கைகளால் கழுவலாம்.

Step 4: உலர்த்தல்:

பையின் உள் பக்கம் மற்றும் வெளிபக்கத்தை வெயிலில் ஒரு நாள் முழுவதும் நன்கு உலர வைக்கவேண்டும். சூரிய ஒளியினால் கிருமிகள் ஏதேனும் இருந்தால் அழிந்துவிடும்.துர்நாற்றமும் அகன்றுவிடும். பை, முழுவதும் உலர்ந்தபின்னரே உபயோகிக்கவேண்டும்.

Step 5: புத்துணர்ச்சி தரும் மணம்:

பைகளை மணம் கமழ செய்ய ஒரு தேக்கரண்டி தண்ணீரில் விருப்பமான அத்தியாவசிய எண்ணெய் (வாசனைஎண்ணெய்) 3-4 சொட்டுகள் விட்டு நன்கு கலக்கவும். ஒரு சாக்பீஸ் எடுத்து அதில் ஊற வைக்கவேண்டும். ஊறவைத்த சாக்பீஸை துணியில் சுற்றி பிள்ளைகளின் பையில் வைக்கலாம். இது பைகளில் நறுமணம் கமழச் செய்யும் .ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சாக்பீஸ் மாற்றலாம்.

முக்கிய குறிப்பு:

ஒரு கிண்ணம் அளவு பேக்கிங்சோடாவைஊற்றி, இரவு முழுவதும் ஊற விட்டு, பின் நீக்கிவிடவும். மேற்கண்ட முறைகளை செய்வதற்குமுன், துர்நாற்றத்தைப்போக்க எளிதான வழியாக இதை பின்பற்றலாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது