விளம்பரம்
Buy Comfort Pure

உங்கள் குழந்தையின் சாக்ஸிலிருந்து மை கறைகளை அகற்ற எளிய வழிகள்

பள்ளி குழந்தைகள் தங்கள் உடைகள், பைகள் மற்றும் கைகளில் மை கறைகளைப் பெறுவது வழக்கமான ஒன்றாகும். இந்த கட்டுரையில், உங்கள் குழந்தையின் சாக்ஸிலிருந்து மை கறைகளை அகற்றுவதற்கான எளிய சுத்தம் செய்யும் முறையை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Simple Steps to Remove Ink Stains from your Child’s Socks

எங்கள் எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் குழந்தையின் சாக்ஸில் இருக்கும் கடுமையான மை கறைகளை கூட அகற்றிவிடலாம். வீட்டிலுள்ள உங்கள் குழந்தைகளின் பள்ளி சாக்ஸிலிருந்து மை கறைகளை விரைவாக அழிப்பது எப்படி என்பது இங்கே. இந்த வழிகள் பருத்தி மற்றும் சின்தடிக் சாக்ஸ் இரண்டிற்கும் வேலை செய்கின்றன.

Step 1: சுத்தம் செய்யும் கலவையை தயாரிக்கவும்

ஒரு கப் தண்ணீர் எடுத்து, அதில் 2 தேக்கரண்டி திரவ சோப்பை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

Step 2: கறைகளில் தடவவும்

சாக்ஸை, ஒரு தட்டையான மேற்பரப்பில் இடவும். சோப்புக்கரைசலை கறை படிந்த பகுதியில் நேரடியாக தடவி தேய்க்கவும். சோப்பு , துணிக்குள் ஊடுருவிட 5 நிமிடங்கள் வைக்கவும்.

விளம்பரம்

Buy Comfort Pure

Step 3: துடைக்கவும்

முடிந்தவரை மை கறையை நீக்க, கறை படிந்த பகுதியை நன்கு துடைக்கவும்.

Step 4: ஊறவைக்கவும்

½  வாளி தண்ணீரை நிரப்பவும், ½ கப் ப்ளீச் மற்றும் 1 தேக்கரண்டி திரவ சோப்பை சேர்க்கவும். அதில் சாக்ஸை முக்கி 30 நிமிடங்கள் ஊற விடவும். ப்ளீச் கையாளும் போது ரப்பர் கையுறைகளை அணிய நினைவில் கொள்ளுங்கள்.

Step 5: கைசலவை

பின்னர், சாக்ஸை வெற்று நீரில் அலசவும்.

Step 6: வினிகரை தேய்க்கவும்

கறை நீடித்தால், சில துளிகள் வினிகரை கறை மீது தேய்க்கவும். உங்கள் சலவை இயந்திரத்தில் சாக்ஸை வைத்து வழக்கமான சுழற்சியை இயக்கவும்.

Step 7: அவற்றை உலரவைக்கவும்

சாக்ஸை சூரிய ஒளியில் உலரவைக்கவும்.

இந்த எளிதான குறிப்புகள் மூலம், கடுமையான மை கறைகளுக்கு எதிரான போரில் நீங்கள் வெற்றி பெறலாம்.!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது