விளம்பரம்
Buy Cif

உங்கள் விண்டேஜ் மர தளபாடங்களை எவ்வாறு சுத்தம் செய்வது

நீங்கள் விண்டேஜ் தளபாடங்களை விரும்புகிறீர்களா? ஆனால் அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்று உறுதியாக தெரியவில்லையா? உங்களுக்கு உதவ சில சிறந்த யோசனைகள் இங்கே உள்ளன!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Clean Your Vintage Wooden Furniture

விண்டேஜ் தளபாடங்கள் உங்கள் வீடுகளுக்கு, ஒரு பெருமை மிகுந்த தோற்றத்தை தரும். உலகம் முழுவதும் இவற்றிற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. விண்டேஜ் தளபாடங்கள் வைத்திருப்பதன் முக்கிய அம்சம் அவற்றை முறையாக பராமரிப்பது. சரியாக பராமரிக்கப்படாத தளபாடங்கள் எளிதில் சேதமடையும். உங்கள் விண்டேஜ் தளபாடங்களை எளிதாக மற்றும் பாதுகாப்பாக சுத்தம் செய்து பராமரிக்க கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

படிநிலை 1: தளபாடங்களை தூசி தட்டவும்

தளர்வான தூசி துகள்களை அகற்ற மென்மையான தூரிகை கொண்டு தூசியை மெதுவாக நீக்கவும். 

படிநிலை 2: சுத்தம் செய்யும் கரைசலை தயாரிக்க வேண்டும்

ஒரு கிண்ணம் சூடான நீரை எடுத்து அதில் லேசான சோப்பு கரைசலை சேர்க்கவும். இதை நன்றாக கலந்து காலி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். 

விளம்பரம்

Buy Cif

படிநிலை 3: தெளிக்கவும்

சுத்தம் செய்யும் கரைசலை தளபாடங்கள் மீது சமமாக தெளித்து 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். 

படிநிலை 4: துடைக்கவும்

இப்போது ஈரமான துணியை பயன்படுத்தி தளபாடங்களை மெதுவாக துடைத்து, அழுக்கு மற்றும் சோப்பை அகற்றவும். துணியை பயன்படுத்தி சுத்தம் செய்ய முடியாத மூலைமுடுக்குகளில், மென்மையான தூரிகையைப் பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.

படிநிலை 5: உலர்த்தவும்

இப்போது உலர்ந்த பருத்தி துணியை பயன்படுத்தி, உலர வைக்க, தளபாடங்களை துடைக்கவும். 

படிநிலை 6: பிரகாசிக்க

உலர்ந்த காட்டன் துணியை எடுத்து அதில் சில துளிகள் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். தளபாடங்களை பளபளப்பாக மாற்ற, இந்தத் துணியை அதன் மேல் சமமாக தேய்க்கவும். இதற்கு நீங்கள் செயற்கை மர பாலிஷையும் பயன்படுத்தலாம், ஆனால் இது உங்கள் விருப்பமானது. 

படிநிலை 7: காற்றில் உலர்த்தவும்

உங்கள் தளபாடங்களை காற்றில் இயற்கையாக உலர விடவும்.

குறிப்பு: உங்கள் தளபாடங்கள் கரையான்களால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் கரையான் கொல்லியை அதன்மேல் பயன்படுத்தலாம். 

இதோ! உங்கள் விண்டேஜ் தளபாடங்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டது!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது