விளம்பரம்
Buy Cif

இந்த மழைக்காலத்தில் உங்கள் வெளிப்புற இடங்களை சுத்தம் செய்ய இந்த எளிதான முறையை முயற்சிக்கவும்.

உங்கள் வெளிப்புற இடத்தில் பருவமழை பாசி கறைகளை பற்றி கவலைப்படுகிறீர்களா? அவற்றை விரைவாக சுத்தம் செய்ய சில சிறந்த உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Try This Easy Method to Clean Your Outdoor Spaces during this monsoon.

வெளியில் சுத்தம் செய்வதை விட நாம் உட்புற சுத்தம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறோம். இதன் விளைவாக, காலப்போக்கில் நம் வெளி இடம், அழுக்காகவும், தூசி நிறைந்த இடமாகவும் மாறும். இந்த பருவமழையில், பூஞ்சை மற்றும் பாசி நமது வெளி இடத்தில் ஈரமான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. அவற்றை சீக்கிரம் சுத்தப்படுத்த வேண்டும், இல்லையெனில் முழு இடத்தையும் விரைவான வேகத்தில் கெடுத்துவிடும். அவற்றை எவ்வாறு எளிதாக சுத்தம் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

படிநிலை 1: இலைகளையும் தூசியையும் நீக்கவும்

ஒரு விளக்குமாறு எடுத்து உங்கள் வெளி இடத்திலிருந்து இலைகள், மண் மற்றும் அழுக்கை நீக்கி, தேவையற்ற பொருட்களை வெளியேற்றவும்.

படிநிலை 2: தண்ணீரால் துடைத்தல்

ஒரு வாளி வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் ஒரு கப் பாத்திரம் கழுவும் திரவம் அல்லது திரவ சோப்பை கலக்கவும். அதைத் தெளித்து / உங்கள் கையைப் பயன்படுத்தி ஊற்றி, சமமாக பரப்பவும். இப்போது குச்சி விளக்குமாறு பயன்படுத்தி கறைகளை நீக்க நன்கு தேய்த்துக் கழுவவும்.

விளம்பரம்

Buy Cif

படிநிலை 3: தேய்க்கவும்

ஒரு கைத்தூரிகையை எடுத்து கடினமான கறை உள்ள இடங்களில் நன்றாக தேய்க்கவும். 

படிநிலை 4: வினிகர்

பூஞ்சை மற்றும் பாசி இருக்கும் இடங்களில், வெள்ளை வினிகர் மற்றும் சமையல் சோடாவை ஊற்றவும். இதற்கு ப்ளீசையும் பயன்படுத்தலாம். 30 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு ஒரு தூரிகையை கொண்டு முழுமையாக தேய்க்கவும்.

படிநிலை 5: கழுவவும்

இப்போது ஒரு நீளமான தண்ணீர் குழாயைப் பயன்படுத்தி அனைத்து அழுக்குகளையும் சோப்பையும் சுத்தம் செய்யவும். பிறகு சூரிய ஒளியில் இயற்கையாகவே உலரவிடவும்.

படிநிலை 6: தூசி தட்டவும்

மென்மையான உலர்ந்த தூரிகையைப் பயன் படுத்தி, வெளிப்புற தளபாடங்களை தூசி தட்டவும். பிறகு ஈரமான துணியை பயன்படுத்தி அனைத்து தளபாடங்கள் மற்றும் மேஜைகளை துடைக்கவும்.

படிநிலை 7: அடைப்பை நீக்கவும்

அடைபட்ட எந்த தள வடிகால்களையும் அகற்றி, மழை நீர் ஒழுங்காக வெளியேற வழி வகுக்கவும்.

சுத்தமான சூழல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதி செய்கிறது! உங்கள் சூழலை சுத்தமாகவும் புதியதாகவும் வைத்திருங்கள்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது