விளம்பரம்
Buy Cif

உங்கள் கல் தளங்களிலிருந்து துரு கறைகளை அகற்றுவது எப்படி

கல் தளங்கள், உங்கள் வீட்டிற்கு ஒரு இனிமையான அழகைக் கொடுக்கின்றன. ஆனால் அவை சில சமயம் விடாப்பிடியான துரு கறைகளுக்கு ஆளாகின்றன. இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிய சுத்தம் செய்யும் குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் தளத்திலிருந்து துரு கறைகளை அறவே அகற்றவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Remove Rust Stains from Your Stone Floors

உங்கள் கல் தரையில், துரு கறை உண்டாவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: கடினமான நீர் மற்றும் துருப்பிடித்த உலோகத்துடன் தொடர்பு. பிடிவாதமான துரு கறை கண்ணுக்கு உறுத்தலாக தெரிந்து உங்களை சோர்வடைய வைக்கும் பொழுது, ​​நீங்கள் இந்த குறிப்புகளை பின்பற்றி, அவற்றை அகற்றலாம்.

 உங்கள் கல் தரையின் குறைபாடற்ற பிரகாசத்தை மீண்டும் கொண்டு வர இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றவும்.

படிநிலை 1: பரப்பை சுத்தம் செய்யுங்கள்

 முதலாவதாக, உங்கள் தரையிலிருந்து மேற்பரப்பு அழுக்கு மற்றும் குப்பைகளை அகற்ற அந்தப்பகுதியை சுத்தமாக பெருக்கவும்.

படிநிலை 2: எலுமிச்சை சாறு வைத்தியம்

தரையில் துருப்பிடித்த இடங்களில் எலுமிச்சை சாறை ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 எலுமிச்சைகளின் சாற்றை பிழியவும். மென்மையான தூரிகையைப் பயன்படுத்தி, துருப்பிடித்த இடங்களில் அதை தடவவும். எலுமிச்சை சாறு அமிலத் தன்மை கொண்டதாகும். அமில சாறு கறைகளில் 15 நிமிடங்கள் ஊறட்டும்.

விளம்பரம்

Buy Cif

படிநிலை 3: பேக்கிங் சோடாவை தூவவும்.

இப்போது, ​​நீங்கள் எலுமிச்சை சாற்றை பரப்பிய கறைகளில் பேக்கிங் சோடாவை தூவவும். தரையில் உள்ள துரு கறைகளை முழுவதுமாக மறைக்க நீங்கள் தாராளமாக பேக்கிங் சோடாவை  தூவலாம்.

படிநிலை 4: தூரிகை மூலம் துடைக்கவும்

இப்போது, எலுமிச்சை சாறு-பேக்கிங் சோடா பேஸ்ட்டை கடினமான தூரிகை மூலம் தேய்க்கவும். எலுமிச்சை சாறு கறைகளை நீக்கும், உங்கள் தளம் முன்பு போலவே ஒளிரும்

படிநிலை 5: ஒரு பேட் கொண்டு துடைக்கவும்

 ஒரு ஸ்க்ரப்பிங் பேட்டை எடுத்து தரையை சுத்தம் செய்யுங்கள். கறை படிந்த பகுதிகளை நன்கு தேய்க்கவும். இந்த கட்டத்தில் கறைகள் விரைவாக வெளியேறும்.

படிநிலை 6: அலசவும்

2 தேக்கரண்டி வினிகரை, ½ வாளி சூடான நீரில் கலந்து ஒரு சுத்தம் செய்யும் கரைசலை தயார் செய்யவும். இந்த கரைசலில் ஒரு சுத்தமான துணியை ஊறவைத்து தரையை துடைக்கவும். பெரிய தரை பகுதிகளை சுத்தம் செய்ய நீங்கள் ஒரு தோட்டக் குழாயை பயன்படுத்தலாம்.

அவ்வளவுதான், உங்கள் கல் தளம் இப்போது உங்கள் விருந்தினர்களை வரவேற்க தயாராக உள்ளது!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது