கல் சிலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் நம் வீடுகளுக்கு அழகையும் நேர்த்தியையும் சேர்க்கின்றன. இவற்றை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது கூட நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை. எனவே அவற்றைப் பாதுகாப்பாக சுத்தம் செய்ய சில எளிய குறிப்புகள் இங்கே.
இந்த பொங்கலுக்கு உங்கள் கல் கைவினைப்பொருட்களை எளிதாக சுத்தம் செய்யும் வழிகள்
உங்கள் அழகான கைவினைப்பொருட்கள் தூசி நிறைந்ததாகவும் அழுக்காகவும் மாறுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்! உங்கள் கைவினைப்பொருட்களை ஒரு நொடியில் சுத்தம் செய்ய கீழேயுள்ள கட்டுரையைப் பின்பற்றுங்கள்!
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது
పంచుபகிர்కోండి
படிநிலை 1: அழுக்கு மற்றும் தூசியை அகற்றவும்
தூசி துடைக்கும் தூரிகை அல்லது மென்மையான பருத்தி துணியின் உதவியுடன் கல் கைவினைப்பொருளில் இருந்து தூசி துகள்களை அகற்றவும்.
படிநிலை 2: சுத்தம் செய்யும் கரைசலை தயாரித்து கொள்ளவும்
வெதுவெதுப்பான நீரை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் லேசான சோப்பு கரைசலை சேர்க்கவும். சோப்பு கரைசல் லேசானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் கடுமையான சோப்பு அல்லது தூய்மை படுத்தும் திரவியம், உங்கள் கல் கைவினைப்பொருட்களின் மேற்பரப்புக்கு தீங்கு விளைவிக்கும்.
விளம்பரம்
படிநிலை 3: ஊறவைக்கவும்
கிண்ணத்திற்குள் கைவினைப்பொருளை வைத்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது அவற்றில் இருக்கும் நுண்ணிய தூசித் துகள்களையும் தளர்த்தும்.
படிநிலை 4: தேய்க்கவும்
கைவினைப்பொருளை வெளியே எடுத்து மென்மையான தூரிகை மூலம் தேய்க்கவும்.
இதற்கு மென்மையான பல் துலக்கும் தூரிகையையும் பயன்படுத்தப்படலாம்.
படிநிலை 5: கழுவவும்
இப்போது குழாய் நீரின் கீழ் கைவினைப்பொருளைக் கழுவவும்.
படிநிலை 6: நன்கு துடைக்கவும்
மென்மையான உலர்ந்த பருத்தி துணியால் அவற்றை நன்றாக துடைக்கவும்.
படிநிலை 7: உலர வைக்கவும்
சூரிய ஒளியில், இயற்கையான முறையில் உலர வைக்கவும்.
படிநிலை 8: கைவினைப் பொருட்கள் மேலும் பிரகாசிக்க
நீங்கள் விருப்பப்பட்டால், உங்கள் கைவினைப்பொருட்கள் மேலும் பிரகாசிக்க, கடைகளில் கிடைக்கும் கல் பொருட்களுக்கான பிரத்தியேக கண்டிஷனரை வாங்கி உபயோகிக்கலாம். இருப்பினும் இது விருப்பத்தேர்வாகும்.
உங்கள் கல் கைவினைப்பொருட்கள் மீண்டும் சுத்தமாகவும் அழகாகவும் ஆகி விட்டன.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது