பித்தளையால் ஆன தொல்பொருட்கள் நம் வீட்டை மிகவும் அழகுபடுத்தகூடியவை. ஆனால் அவை மிகவும் நன்றாக பராமரிக்கப்பட வேண்டும். கீழே உள்ள வழிமுறைகளை கொண்டு அவற்றை புதுப்பித்து , அனைவரையும் கவரும் வண்ணம் அழகாக மாற்ற முடியும்.
எளிதாகவும் பாதுகாப்பாகவும் பித்தளையை சுத்தம் செய்யும் வழிகள்:
பற்பசை பயன்படுத்தவும்
சிறிதளவு பற்பசையை ஒரு துணியில் தடவி, பித்தளைப்பொருட்கள் மீது நன்றாக தேய்க்க வேண்டும். பின் நனைந்த துணியால் துடைத்து, அதன் பின் மென்மையான உலர்ந்த துணியால் துடைத்து முடிக்க வேண்டும்.
கெட்சப் பயன்படுத்தவும்
கெட்சப்பின் தக்காளி சாற்றில் இருக்கும் ஆசிட் தன்மை இயற்கையாகவே பித்தளையை புதுப்பிக்கும் தன்மை கொண்டது. அது விடாப்பிடியான அழுக்கையும் சுலபமாக நீக்கிவிடும். ஒரு துணியில் சிறிதளவு கெட்சப் கொண்டு பித்தளையை தேய்த்து, பின் சுடுநீரில் கழுவி, மென்மையான உலர்ந்த துணியில் துடைத்து எடுக்க வேண்டும்.
வினிகர் மற்றும் மாவு பயன்படுத்தவும்
இரண்டு மேஜைக்கரண்டி வினிகர் மற்றும் 2 மேஜைக்கரண்டி மாவை நன்கு பிசைந்து பித்தளை பொருளின் மேல் பூசி நன்கு உலரவிடவேண்டும். வினிகர் அழுக்குகளை நீக்க, மாவு அதை உறிஞ்சிக்கொள்ளும். பின் அவற்றை சுத்தம் செய்து சோப்பு தண்ணீரில் கழுவி, உலர்ந்த துணியால் துடைத்து எடுக்கவேண்டும்.
எலுமிச்சைசாறு பயன்படுத்தவும்
எலுமிச்சை பழத்தை பாதியாக அறுத்து, உப்பு தடவி ,பித்தளை பொருளின் மேல் முழுவதுமாக நன்கு தேய்க்கவேண்டும். பின் உலர்ந்த துணியால் துடைத்து எடுக்கவேண்டும். பித்தளை பொருள் புதிது போல் மின்னும்.
உங்கள் விலை உயர்ந்த பித்தளை பொருட்களை அழகாக மின்ன செய்ய மேல்கண்ட வழிகள் சிறப்பாக உதவும்.