விளம்பரம்
Buy Surf Excel Matic

உங்கள் குடும்பத்தின் அளவுக்கு ஏற்றவாறு சரியான வாஷிங்மெஷினை தேர்ந்தெடுப்பது எப்படி

வாஷிங் மெஷின்கள் பல்வேறுவகையான அம்சங்களுடனும் பலவகையான அளவுகளிலும் கிடைக்கின்றது. உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு சரியான அளவிலான வாஷிங் மெஷினை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் இந்த கட்டுரையில் உங்களுக்கு வழி காட்டுகிறோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Choose the Right Washing Machine Based on Your Family Size

வாஷிங் மெஷின் என்பது ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாத ஒரு பொருளாகும். அது நீங்கள் சலவை செய்வதை மிகவும் சுலபமாக்கிவிடுகிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் சந்தைகளில் பல்வேறு வகையான வாஷிங் மிஷின்கள் விற்கப்படுகிறது. எனவே எந்த வாஷிங்மெஷினை வாங்க வேண்டும் என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏற்படக்கூடும். இதோ இந்த கையேட்டில் உள்ள குறிப்புகளை பின்பற்றி எவ்வாறு உங்கள் குடும்பத்தின் அளவிற்கேற்ப சிறந்த வாஷிங்மெஷினை தேர்ந்தெடுப்பது என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

இதோ துவங்கலாம்.

1) 2-4 நபர்களுக்கு

உங்கள் குடும்பத்தில் இரண்டு முதல் நான்கு நபர்களே இருப்பின், நீங்கள் 5.8 கிலோ கொள்திறன் கொண்ட வாஷிங் மெஷினை தேர்ந்தெடுக்கலாம். உங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குறைவான கொள்திறன் கொண்ட வாஷிங்மெஷினே போதுமானது. இந்த கொள்திறனோடு பல்வேறு வகையான அம்சங்களை கொண்ட வாஷிங் மிஷின்கள் சந்தையில் கிடைக்கின்றது.

2) 5-7 நபர்களுக்கு

உங்கள் குடும்பத்தில் 5-7 நபர்கள் இருந்தால் பெரிய அளவு வாஷிங் மெஷினை தேர்வு செய்வது நல்லது. 8.5 கிலோ கொள்திறன் கொண்ட வாஷிங்மெஷின், சரியான தேர்வாகும். அதிக நபர்கள் இருக்கும் வீட்டில், அதிகமாக துணியை சலவை செய்ய வேண்டியிருக்கும். எனவே அதிக கொள்திறன் கொண்ட வாஷிங்மெஷினை உபயோகித்து ஒரே சலவையில் எந்த ஒரு கஷ்டமும் இன்றி அதிக அளவு துணிகளை துவைத்து விட முடியும். துணிகள் சுழல்வதற்கு அதிக இடம் கிடைப்பதால் ஒன்றோடு ஒன்று உரசாமல் சுலபமாக துவைத்து முடிக்க முடியும்.

3) 8-10 நபர்களுக்கு

உங்கள் குடும்பத்தில் 8-10 நபர்கள் இருந்தால் , 8-10 கிலோ கொள்திறன் கொண்ட வாஷிங்மெஷினை தேர்வு செய்வது நல்லது. அதிகமான கொள்திறன் கொண்ட வாஷிங்மெஷின் உங்கள் துணிகளை ஒரே சலவையில் விரைவாக மற்றும் சிறந்த முறையில் துவைக்க உதவும்.

இந்த உதவிக் குறிப்புகளை  பின்பற்றி உங்கள் குடும்பத்தின் அளவிற்கேற்ப வாஷிங்மெஷினை நீங்கள் தேர்வு செய்யலாம். அதுமட்டுமின்றி நீங்கள் மேலும் சிறப்பான சலவையை எதிர்பார்த்தால், ஸர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட் போன்ற திரவ சோப்பை பயன்படுத்தி பார்க்கவும். ஏனென்றால் அவை வாஷிங் மெஷின்களுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இவை மற்ற சோப்பு தூளை போல் இல்லாமல், தண்ணீரில் முழுவதுமாக கரைந்து (எந்த ஒரு பொடியையும்) சலவைக்கு பின் துணிகளின் மேல் படிய விடாது.

விளம்பரம்

Buy Surf Excel Matic

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது