பலவிதமான லோடு துணிகளை வாஷ் செய்த பின் உங்கள் வாஷிங் மெஷினில் ஒரு துர்நாற்றம் வீசுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். பதட்டப்படாதீர்கள், இது பொதுவாக உங்கள் வாஷிங் மெஷினில் உள்ள டிரம்மில் குவியும் நூல் இழைகள் மற்றும் டிடர்ஜென்டு கசடுகளால்தான் ஏற்படுகிறது.
கவலைப்படாதீர்கள், இதை விரைவாகப் போக்கி விடலாம்.
செயல் 1:
பேக்கிங் சோடா 1/4 கப் மற்றும் 1/4 கப் தண்ணீர் நன்கு கலந்து ஒரு கலவையாக்கி கொள்ளுங்கள். பின்பு இந்த கரைசலை உங்கள் வாஷிங் மெஷினின் டிடர்ஜெண்ட் கன்டெய்னரில் ஊற்றி விடுங்கள்.
செயல் 2:
இப்போது நீங்கள் உங்கள் வாஷிங் மெஷின் டிரம்மில் 2 கப்கள் ஒயிட் வினிகர் ஊற்றி அதிக டெம்பரேச்சரில் ஒரு நார்மல் லோடு ஓட வையுங்கள். இந்த அதிக வெப்ப நிலை பாக்டீரியாக்களை கொல்ல உதவுவதோடு அனைத்து அழுக்குகளையும் அகற்றி விடும்.
செயல் 3:
1 கப் வினிகர் மற்றும் 1 கப் தண்ணீர் இரண்டையும் ஒரு வாளியில் ஊற்றி கலக்கி அதில் ஒரு ஸ்பாஞ்சை முக்கி ஸ்பாஞ்ச்-ன் சொரசொரப்பான பகுதியால் மீதி இருக்கும் ஏதேனும் அழுக்கு அல்லது கறைகள் மீது அழுத்தி தேயுங்கள். ரப்பர் சீல்-ஐ சுத்தம் செய்வது முக்கியம். ஏனெனில் பெரும்பாலான டிடர்ஜெண்ட் படிவுகள் ஒவ்வொரு முறை வாஷ் செய்த பின்பும் சீல்-ல் குவிந்து விடும்.
செயல் 4:
ஃபிரெஷ்னஸை பராமரிக்க வாஷிங் மெஷின்களுக்காகவே தயாரிக்கப்பட்ட சக்திமிக்க தரமான டிடர்ஜெண்ட்களை பயன்படுத்துங்கள். வாஷ்களுக்கு இடையே டிரம்மை உலர விடுங்கள். டிடர்ஜெண்ட் டிராயரை மற்றும் லின்ட் ஃபில்டரை சுத்தம் செய்யுங்கள் மற்றும் எப்போதாவது ஒரு தடவை கேஸ்கட்டையும் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாஷ் செய்த பின்பும் நீங்கள் வாஷிங் மெஷினின் ஈரத்தை அகற்றி விட ஒரு சுத்தமான துணியால் மிகுதியான தண்ணீரை துடைத்து அகற்றுவதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலும் தூற்நாற்றத்திற்கு ஈரமே முக்கிய காரணம்.
அவ்வப்போது உங்கள் வாஷிங் மெஷின் மீது கவனம் செலுத்துங்கள் இதனால் நீங்கள் வாஷ் செய்யும் துணிகளும் கூட சிறப்பாக இருக்கும்.