விளம்பரம்
Buy Surf Excel Matic

ஃப்ரன்ட்-லோட் சலவை இயந்திரத்தை தேர்வு செய்வதற்கான முக்கியத்துவம்.

சரியான வகை சலவை இயந்திரத்தை நீங்கள் வைத்திருப்பது சலவை செய்வதை சுலபமாக்கிடும். ஒரு ஃப்ரன்ட்-லோடிங் சலவை இயந்திரத்தின் நன்மைகளை நீங்கள் தெரிந்துக் கொள்ள விரும்பினால், இந்த வழிகாட்டி உங்களுக்காக தான்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Here’s Why You Should Choose a Front-Loading Washing Machine

முன் ஏற்றும் சலவை இயந்திரம், உங்கள் சலவைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இது உங்கள் துணிகளை விரைவாகவும் ஆழமாகவும் மென்மையாகவும் சுத்தம் செய்ய வல்லது. புதிய இயந்திரம் வாங்கும் முன், கீழுள்ள முன்-ஏற்றும் சலவை இயந்திரத்தின் ஒரு சில நன்மைகளை காண்க.

1) அதிக கொள் திறன்:

முன்-ஏற்றும் சலவை இயந்திரத்தின் முக்கிய அம்சம், அதிக கொள் திறன். இது மேல்-ஏற்றும் இயந்திரத்துடன் ஒப்பிடுகையில் அதிக கொள் திறன் கொண்டது என்பதால், அதிக துணிகளை ஒரே தடவையில் துவைக்க முடியும். கனமான துணிகளைக் கூட எளிதாக துவைக்கலாம்.

2) குறைந்த நீர்- தேவை:

சராசரியாக மேல்-ஏற்றும் இயந்திரம் ஒரு சலவைக்கு 90 முதல் 100 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. அதே சமயம், முன்- ஏற்றும் இயந்திரம் ,அதில் பாதி அல்லது அதற்கும் குறைவாகவே பயன்படுத்துகிறது.

விளம்பரம்

Buy Surf Excel Matic

3) குறைந்த மின் தேவை மற்றும் குறைந்த சலவைத்தூள் :

முன் ஏற்றிகள், மேல் ஏற்றிகளுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு மின்சக்தி மற்றும் சோப்பு ஆகியவற்றை பயன்படுத்துகின்றன.

4) குறைவான சுழற்சிகள் தேவை:

முன்-ஏற்றும் இயந்திரம் அதிக கொள் திறன் கொண்டதால், ஒரே சுழற்சியில் நிறைய துணிகளை சலவை செய்கிறது. இது உங்களுக்கு தேவையான சலவை சுழற்சிகளின் மொத்த எண்ணிக்கையை குறைக்கிறது.

5) வேகச்சுழல்- சுழற்சியின் போது குறைந்த சத்தம்:

பல முன்-ஏற்றும் சலவை இயந்திரங்கள் , அதிர்வு கட்டுப்பாட்டை கொண்டுள்ளன. இந்த அம்சம், உள்ளிருக்கும் ட்ரம்மை நிலைப்படுத்துவதால் ஒட்டுமொத்த இயந்திரமும் ஆடுவதில்லை. இவை தரைக்கும் நல்லது.

6) கச்சிதமான அளவு:

மேல்- ஏற்றும் சலவை இயந்திரத்துடன் ஒப்பிடுகையில் ,முன்-ஏற்றி மிகவும் கச்சிதமாக இருப்பதோடு குறைந்த இடத்தையே எடுக்கும்.

மிகுந்த ஆற்றல் கொண்ட இந்த முன்-ஏற்றும் இயந்திரம், நேரத்தை மிச்சப்படுத்த நன்றாக உதவுகிறது. சலவை இயந்திரம் வாங்கும் பொழுது, இனிமேல் நீங்கள் தகவலறிந்து சிறப்பாக தேர்வு செய்யலாம்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது