உங்களுடைய சலவை இயந்திரமானது உங்களுடைய ஆடைகளையும் நல்ல நறுமணத்துடன் வைத்திருக்கும். சில சுலபமான குறிப்புகளுடன் உங்களுடைய சலவை இயந்திரத்தை எப்படி நல்ல நறுமணத்துடன் வைத்திருப்பது என்பது பற்றி இங்கே காட்டுகிறோம்.
பரிந்துரைக்கப்பட்ட தலைப்பு: உங்களுடைய சலவை இயந்திரத்தை எல்லா நேரத்திலும் சிறந்த நறுமணத்துடன் வைத்திருப்பது எவ்வாறு!
ஒரு நறுமணம் மிக்க சலவை இயந்திரமானது நீங்கள் சலவை செய்யும் ஆடைகளையும் கூட புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். உங்களுடைய சலவை இயந்திரமானது நறுமணம் வீச இந்த குறிப்புகளை முயற்சி செய்யவும்.
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது
పంచుபகிர்కోండి
1) ட்ரம்மை சுத்தமாக வைத்திருத்தல்
உங்களுடைய சலவை இயந்திரத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கான முதல் நிலையானது, அதை முறையாக பராமரிப்பது ஆகும். ஆடைகள் துவைக்கப்பட்ட பின் விரைவில் ஈரமான ஆடைகளை வெளியே எடுத்துவிடவும். உங்களுடைய சலவை இயந்திரத்தினுடைய டிரம்மை சுத்தம் செய்ய, ஒரு பெரிய கிண்ணத்தில் தலா 1 கப், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் ப்ளீச் போன்றவற்றைச் சேர்க்கவும். இவைகளை நன்றாகக் கலக்கவும். ஒரு தூய்மையான துணியை எடுத்து, அதை இந்த கரைசலில் நனைத்து டிரம்மை சுத்தம் செய்யவும். பிறகு வேறொரு சுத்தமான ஈரத் துணியால் துடைக்கவும். வாரத்திற்கு ஒரு முறையாவது இது போலச் செய்யவும். ப்ளீச்சை உபயோகப்படுத்தும் சமயங்களில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ரப்பரால் ஆன கையுறைகளை அணிய மறக்காதீர்கள்.
Advertisement
2) சோப் டிஸ்பென்சரை சுத்தம் செய்யுங்கள்
உங்களுடைய சலவை இயந்திரத்திலிருகின்றச் சோப்பு டிஸ்பென்சரை வெளியே எடுத்து அதை 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி டிஸ்வாஷிங்க் லிக்கியுட்டுடன் ஒரு கரைசலைச் சேர்க்கவும். உங்களுடைய சோப்பு டிஸ்பென்சரை சுத்தம் செய்ய இந்த கரைசலில் பஞ்சை நனைத்து உபயோகப்படுத்தவும். இது நல்ல நறுமணத்துடன் இருக்க, ½ வாளி வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் 1 தேக்கரண்டி நறுமண எண்ணெயைச் சேர்த்து, சோப்பு டிஸ்பென்சரை இந்த கரைசலில் போடவும். 15 நிமிடங்களுக்கு அதிலே வைத்திருக்கவும். டிஸ்பென்சரை வெளியே எடுத்து, பின்னர் கரைசலை நீக்க அலசவும். அதை மீண்டும் உங்களுடைய சலவை இயந்திரத்திலேயே பொருத்தவும்.
3) வினிகர் மற்றும் சமையல் சோடாவை உபயோகப்படுத்தவும்
2 கப் வெதுவெதுப்பான தண்ணீரில், 3 கப் வினிகர் மற்றும் ½ கப் சமையல் சோடாவை சேர்க்கவும். அதை நன்றாகக் கலந்து இந்த சுத்தப்படுத்தும் பொருளை உங்களுடைய சலவை இயந்திரத்தில் சேர்க்கவும். நீண்ட நேரத்திற்கு உங்களுடைய இயந்திரத்தை இயக்கவும். இது அதில் ஒன்று சேர்ந்துள்ள அனைத்து அழுக்குகளையும் சுத்தம் செய்து, உங்களுடைய சலவை இயந்திரத்தை நறுமணத்துடன் வைத்திருக்கும்.
4) உங்களின் சலவை இயந்திரத்தை உலர வைக்கவும்
உங்களுடைய சலவை இயந்திரத்தை எப்போதுமே உலர்வாக வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு முறையும் துணி துவைத்து முடித்த பின்னர், உங்கள் சலவை இயந்திரத்தினுடைய மூடியைத் திறந்து வைக்கவும். இது காற்றோட்டமாக இருக்க உதவும். கண்ணாடி மற்றும் கதவு வளையங்களைத் துடைக்கவும். 1 கிண்ணம் வெதுவெதுப்பான நீர் மற்றும் உங்களுக்கு பிடித்தமான நறுமண எண்ணெய்யின் 5-6 சொட்டுகள் போன்றவையை உங்களுடைய சலவை இயந்திரத்தின் உட்பகுதியையும் வெளிப்பகுதியையும் துடைக்க உபயோகப்படுத்தலாம்.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது