உங்கள் ஒட்டாத உலோகத்தட்டிலிருந்து ஆம்லெட் உங்கள் தட்டுக்குள் சுலபமாக சரியும்போது திருப்தியாக உள்ளதா? அல்லது வறுத்த சாதம் மிக விரைவாக, குறைந்தபட்ச எண்ணெயில் சமைக்கப்படுகிறதா? உங்கள் ஒட்டாத சமையல் பாத்திரங்களை நீண்ட காலம் நீடிக்கச் செய்ய, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
Step 1: உலோக கரண்டியை பயன்படுத்தவேண்டாம்
உங்கள் ஒட்டாத சமையல் பாத்திரங்களில் சமைக்கும்போது உலோக கரண்டியை தவிர்க்கவும். அவை கீறல்களை ஏற்படுத்தி பூச்சை சேதப்படுத்தும். அதற்கு பதிலாக, மர அல்லது ரப்பர் தட்டைக்கரண்டியை பயன்படுத்துங்கள்.
விளம்பரம்
Step 2: ஒட்டாத உலோகத் கடாய்களை தனியாக வைக்கவும்
உங்கள் ஒட்டாத சமையல் பாத்திரங்களை கழுவிய பின், அவற்றை மைக்ரோ ஃபைபர் துணியால் துடைத்து உலர வைக்கவும். பின்னர் அவற்றை மற்ற பொருட்களின் பாத்திரங்களிலிருந்து தனியாக வைக்கவும். இது கீறல்கள் மற்றும் சேதங்களைத் தடுக்கும். ஒவ்வொரு வாணலிக்கும் இடையில் காகித துண்டுகளை வைத்து , அவற்றை வரிசைப்படுத்துவது நல்லது. காகித தட்டுகள் மற்றும் மென்மையான துணிகளையும் இதற்கு பயன்படுத்தலாம்.
Step 3: ஒட்டாத உலோகத் கடாயை முன்கூட்டியே சூடாக்க வேண்டாம்
கடாயை சூடாக்குவதற்கு முன், ஒரு மெல்லிய அடுக்கு எண்ணெயை மேற்பரப்பில் சமமாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். இது சேதங்களைத் தடுக்கும். வெறும் கடாய்களை ஒருபோதும் சூடாக்காதீர்கள், ஏனெனில் அதன் பூச்சிலிருந்து நச்சுக்கள் வெளியாகும்.
Step 4: உயர் வெப்ப அமைப்பைப் பயன்படுத்த வேண்டாம்
உங்கள் ஒட்டாத பாத்திரங்களில் சமைக்கும்போது குறைந்த அல்லது நடுத்தர வெப்பத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். அதிக வெப்பம், பூச்சை சேதப்படுத்துவதோடு சில சந்தர்ப்பங்களில் புகையையும் விடுவிக்கும். இது நடந்தால், உடனடியாக வெப்பத்தை குறைத்து, உங்கள் ஜன்னல்களைத் திறக்கவும்.
Step 5: சிராய்ப்பு தரும் கிளீனர்களைப் பயன்படுத்த வேண்டாம்
உங்கள் ஒட்டாத சமையல் சாதனங்களில் , சிராய்ப்பு தரும் கிளீனர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 2 கப் மிதமான சூடுடைய தண்ணீரில், 1 தேக்கரண்டி பாத்திரம் கழுவும் திரவம் சேர்க்கவும். சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்ய கீறல் விழாத தூரிகையை பயன்படுத்தவும். கழுவியபின் மைக்ரோ ஃபைபர் துணியால் துடைத்து உலர வைக்கவும்.
எனவே, அடுத்த முறை உங்கள் ஒட்டாத சமையல் பாத்திரங்களை வாங்கி வரும் போது, அவற்றின் நீண்ட ஆயுளுக்கு, இந்த எளிய உதவிக்குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது