விளம்பரம்
Buy Vim

உங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை பராமரிக்க எளிதான உதவிக்குறிப்புகள்

உங்கள் மங்கலான ஸ்டீல் பாத்திரங்களை பற்றி கவலைப்படுகிறீர்களா? அவை நன்றாகவும் பிரகாசமாகவும் இருக்க கீழேயுள்ள கட்டுரையைப் பின்பற்றுங்கள்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Easy Tips to Maintain Your Stainless Steel Crockery

துருப்பிடிக்காத ஸ்டீல் பாத்திரங்கள், ஒவ்வொரு வீட்டிலும் பெரும்பாலும் சமையலுக்கு உபயோகிக்கும் பொருட்களாகும். ஆனால் இவற்றின் இடைவிடாத பயன்பாட்டின் காரணமாக இவை கருப்பாகவும், பழையது போலும் மாறுகின்றன. இவற்றை நன்றாக சுத்தம் செய்து பராமரிக்க சில எளிய குறிப்புகள் இங்கே.

படிநிலை 1: சூடு ஆற விடவும்

சமைத்த பிறகு, சிறிது நேரம், சூடு குறையும் வரை காத்திருக்கவும். நேரமில்லை என்றால், சிறிது குளிர்ந்த நீரை அதனுள் ஊற்றி வைத்தோ அல்லது மின்விசிறியை இயக்கியோ சில நிமிடங்களில் குளிர வைத்து விடலாம்.

படிநிலை 2: சுத்தம் செய்யும் கரைசலை தயாரிக்கவும்

ஒரு வாளி வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவும் திரவத்தைச் சேர்த்து, வாளியின் உள்ளே பாத்திரங்களை ஒவ்வொன்றாக வைக்கவும்.

விளம்பரம்

Buy Vim

படிநிலை 3: ஊற விடவும்

பாத்திரங்களை 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவும். 

படிநிலை 4: துலக்கவும்

பாத்திரங்களை வெளியே எடுத்து அவற்றை ஸ்க்ரப்பிங் பேட் மூலம் துலக்கவும்.

படிநிலை 5: கழுவவும்

குழாய் நீரின் கீழ் அவற்றை நன்றாக கழுவவும். 

படிநிலை 6: வினிகரைப் பயன்படுத்துங்கள்

சிறிது வெள்ளை வினிகரை எடுத்து மென்மையான பருத்தி துணியில் ஊற்றவும். பாத்திரங்களில், அந்தத் துணியை வைத்து நன்றாக தேய்க்கவும்.

படிநிலை 7: 5 நிமிடங்கள் காத்திருக்கவும்

இது 5 நிமிடங்கள் இருக்கட்டும். 

படிநிலை 8: கழுவவும்

குழாய் நீரின் கீழ் அவற்றை மீண்டும் கழுவவும்.

படிநிலை 9: துடைக்கவும்

உலர்ந்த பருத்தி துணியால் அவற்றை துடைக்கவும்.

உங்கள் பாத்திரம் இப்போது புதியது போல்

நன்றாக இருக்கும்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது