உங்கள் கேவாஸ் ஷூக்கள் புத்தம் புதிதுபோல தோற்றமளிக்க வேண்டுமா? கவலை வேண்டாம். அது கஷ்டமானதும் அல்ல. உங்கள் ஸ்போர்ட் ஷூக்களுக்கு புதிதான தோற்றம் தர வேண்டுமோ அல்லது அவற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டுமோ. இப்போது அதை ஆற்றல் மிக்க சலவை முறையினால் அற்புதமாக சுத்தம் செய்யலாம்.
உங்கள் ஸ்போர்ட்ஸ் ஷூவை ஆற்றலுடன் சுத்தம் செய்ய இந்த எளிய குறிப்புகளை செய்து பாருங்கள்.
ஸ்டெப் 1:
லேசை கழட்டிவிட்டு,மேலேயும்,சோல்களிலும், மற்ற பகுதிகளிலும் படிந்திருக்கும் தூசுகளை பிரஷ் செய்து நீக்கவும். இதை நீங்கள் கைகளால்செய்யலாம் அல்லது பிரஷ் செய்து நீக்கலாம் (பழைய கெட்டியான பெயிண்ட் பிரஷ் அல்லது பழைய டூத் பிரஷ் போன்றவை இதற்கு மிகவும் பயன்படும்)
ஸ்டெப் 2:
1 டீஸ்பூன் சலவை டிடெர்ஜென்ட்டை ஒரு கப் தண்ணீரில் போட்டு கரைக்கவும். அதே பிரஷ்ஷை இந்த கரைசலில் நனைத்து ஷூவிலுள்ள ஃபேப்ரிக், மெஷ் மற்றும் ரப்பர் பகுதிகளை இந்த கரைசலால் மென்மையாக பிரஷ் செய்யவும். பிறகு சுத்தமான ஈரமான துணி அல்லது ஸ்பாஞ்ஜை பயன்படுத்தி அழுக்கை நீக்கவும்
ஸ்டெப் 3:
ஒரு வலைப் பையை எடுத்து அதில் ஸ்போர்ட்ஸ் ஷூவை வைக்கவும். அந்த பையை உங்கள் வாஷிங் மெஷினில் போடவும். வழக்கம்போல லாண்டரி டிடெர்ஜென்ட் சேர்க்கவும், பிறகு மெஷினை குளிர்ந்த செட்டிங்கில் ஓடவிடவும்.
ஸ்டெப் 4:
அவற்றை சலவை செய்த பிறகு உங்கள் ஸ்போர்ட் ஷூக்களை நல்ல காற்றோடமான பகுதியில் உலர வைக்கவும்.
அடுத்த முறை உங்கள் ஸ்போர்ட்ஸ் ஷூவை வாஷிங் மெஷினில் சுத்தம் செய்ய விரும்பினால் மேற்கண்ட முறையைக் கையாண்டு அவற்றை கஷ்டமே இல்லாமல் துவைத்து அப்பழுக்கற்ற சுத்தம் பெறுங்கள்.
முக்கியமான வழிமுறை
உங்கள் ஸ்போர்ட்ஸ் ஷூவை சுத்தம் செய்த பிறகு அவற்றை உடனடியாக நீங்கள் அணிய விரும்பாவிட்டால் அவற்றில் பழைய செய்தித் தாள்களை கசக்கி ஷூவிற்குள் அடைத்து வைக்கவும். இதன் மூலம் அவற்றின் அசல் வடிவத்தை தக்க வைக்கலாம்.