தமிழ்நாட்டில், கண்டாங்கி சேலை மிகவும் பிரபலமானது. இது எவ்வளவு பிரபலம் என்றால், திரைப்பட நட்சத்திரமான விஜய்யின் “கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொன்னு” பாடலில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது எனலாம்.
இந்த சேலையை பராமரிப்பதற்கு சிறப்பான கவனம் தேவை.
உங்கள் கண்டாங்கி சேலையை, நன்றாக பராமரிக்க, கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
படிநிலை 1: சேலையை ஊற வைக்கவும்
சவக்காரம் அல்லது ஷாம்பு கலந்த தண்ணீரில் சேலையை சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
படிநிலை 2: சேலையை அலசவும்
சேலையை இளஞ்சூடுடைய நீரில் கைகளால் அலசவும்.
படிநிலை 3 : சேலையை உருட்டவும்
சேலையை ஒரு பந்தாக உருட்டவும், அதை முறுக்கி நன்றாக வடிக்கவும், இதனால் வெயிலில் காய்வதற்கு குறைந்த நேரமே தேவைப்படும்.
படிநிலை 4: சேலையை உலர வைக்கவும்.
நேரடி சூரிய ஒளி படாமல், வெளிப்புற இடத்தில் சேலையை உலர வைக்கவும்.
படிநிலை 5 : இஸ்திரி செய்யவும்
முழுமையாக உலர்ந்த பிறகு சேலையை லேசான வெப்ப அமைப்புகளுடன் இஸ்திரி செய்யுங்கள்.
படிநிலை 6 : சேலையை பத்திரமாக எடுத்து வைக்கவும்
பருத்தி புடவைகளுடன் உங்கள் அலமாரிகளில், கண்டாங்கி சேலையை எடுத்து மடித்து வைக்கவும்.
படிநிலை 7 : வேப்ப இலைகளைச் சேர்க்கவும்
சேலையைச் எடுத்து வைக்கும் போது சில அந்துருண்டைகள் அல்லது உலர்ந்த வேப்ப இலைகளைச் சேர்க்கவும்.