இத்தகைய துர்நாற்றத்தை முதல்கட்டத்திலேயே அகற்றுவதுதான் சிறந்த வழி. எனினும், அந்த துர்நாற்றத்தை நீக்குவது அல்லது கட்டுப்படுத்துவது ஒன்றும் எளிதான விசயம் இல்லை. உங்கள் ஆடைகள் நல்ல நறுமணத்துடன் இருப்பதை உறுதி செய்ய இந்த யோசனைகள் சிலவற்றை முயற்சியுங்கள்.

  • ஆடைகளின் உள்ளே வினிகரை தெளித்து அதனை சில மணிநேரம் ஹேங்கரில் உலர விட வேண்டும்.
  • வாஷிங் மெஷினில், உங்களது ஆடைகளை போட்டு, வார்ம் டிரை ஸ்பின் கொடுங்கள். சில துளிகள் எலுமிச்சை சாறு கூட சேர்த்துக் கொள்ளலாம். துர்நாற்றம் நீங்கிவிடும்.
  • ஒருநாள் முழுக்க ஆடைகளை உறைய வையுங்கள். அடுத்த முறை துவைக்கும்போது, ஆடையில் துர்நாற்றம் எதுவும் இருக்காது.
  • பின்னர் அந்த ஆடைகளை வாஷிங் மெஷினில் போட்டு, வெந்நீரில் ஒரு கப் வினிகர் கலந்து, துவைத்து எடுங்கள். அவற்றை உடனே காயப்போட மறந்துவிடாதீர்கள்.

புத்தம் புதிய சலவையின் நறுமணத்தை நன்கு சுவாசித்து மகிழுங்கள்.