உங்கள் தேவைக்கேற்ப, பட்ஜெட் விலையில், குடும்பத்தினர் விரும்பும் நறுமணத்துடன் கூடிய டிடர்ஜென்டை தேர்வு செய்வது எப்படி என்று கீழ்க்கண்ட குறிப்புகளை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
1) சுத்தம் செய்தல்
பொதுவாகப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்டுகளை விட, சில விலை உயர்ந்த டிடர்ஜென்டுகள், கொடுத்த காசுக்கு நல்ல பலன் தரக்கூடியவை. அதேசமயம், விலை குறைவான டிடர்ஜென்டுகள், உங்கள் துணியை நன்றாக சலவை செய்தாலும், துணியின் அளவுக்கு ஏற்ப, அதன் தேவையும் அதிகரிக்கக்கூடும்.
விளம்பரம்
2) உயர் திறனுள்ள டிடர்ஜென்ட்
குறைவான நீரை பயன்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின்கள் உள்ளன; அத்தகைய மெஷின்களுக்காக தயாரிக்கப்படுபவையே இந்த உயர்திறன் வாய்ந்த டிடர்ஜென்டுகள். இவை துணிகளை சிறப்பாக சலவை செய்ய உதவுகின்றன.
3) நறுமணம்
ஒரு டிடர்ஜென்ட் வாங்கும்போது, அதன் நறுமணம் பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதேசமயம், உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ குறிப்பிட்ட வாசனை பிடிக்காது எனில், எவ்வித நறுமணமும் இல்லாத டிடர்ஜென்டை தேர்வு செய்வது நலம்.
4) ஒவ்வாமை
உங்களுக்கு சரும ஒவ்வாமை இருந்தால், சாயம் கலக்காத டிடர்ஜென்டுகளை பயன்படுத்துவது நல்லது.
டிடர்ஜென்ட் வாங்கும் முன்பாக, மேற்கூறிய அனைத்து விசயங்களை யோசித்து பார்த்து முடிவு செய்யுங்கள்.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது