சர்க்கரை பொங்கல் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் வெல்லமும் ஒன்றாகும். பொங்கல் சுவையாக சமைக்கும்போது, தற்செயலாக அதை உங்கள் துணிகளில் சிந்துவதற்கான சாத்தியங்கள் அதிகம். வெல்லத்தின் சுவையானது இனிமையாக இருக்கும்போது, அதன் கறைகள் அவ்வளவு இனிமையாக இருக்காது. விரைவில் சுத்தம் செய்யாவிட்டால் அவை விடாப்பிடியான கறையாகிவிடும். எனவே கீழேயுள்ள குறிப்புகளை பயன்படுத்தி அவற்றை எவ்வாறு அகற்றுவது என்பதை பார்ப்போம்.
உங்கள் ஆடைகளிலிருந்து வெல்லக்கறைகளை அகற்றுவது எப்படி
உங்கள் புதிய திருவிழா உடையில் வெல்லத்தை கொட்டி விட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! அந்த கறைகள் மறைந்து போக சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் இங்கே!
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது
పంచుபகிர்కోండి
படிநிலை1: கறையை சுத்தம் செய்க
கறையை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும், நன்றாக உலர்ந்து விட்டால் இன்னும் விடாப்பிடியான ஒன்றாகிவிடும்.
படிநிலை 2: சுத்தம் செய்யும் கரைசலை உருவாக்க வேண்டும்
ஒரு வாளி வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் 1 கப் துணி சுத்தம் செய்யும் திரவியத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
படிநிலை 3: ஆடையை ஊறவைக்கவும்
துணியை வாளியில் போட்டு இரவு முழுவதும் ஊற விடவும்.
படிநிலை 4: கறையை தேய்க்கவும்
அடுத்த நாள் காலையில், துணியை வெளியே எடுத்து, ஒரு தூரிகையைப் பயன்படுத்தி மெதுவாக கறையைத் தேய்க்கவும்.
படிநிலை 5: கடுமையான கறைகளுக்கு வினிகரைப் பயன்படுத்துங்கள்
கறை இன்னும் தெரிந்தால், ஒரு கப் வெள்ளை வினிகரை எடுத்து கறை மீது ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
படிநிலை 6: கறையை தூரிகை கொண்டு தேய்க்கவும்
இப்போது ,கறையை வட்ட வாக்கில் ஒரு தூரிகை கொண்டு தேய்க்க முயற்சிக்கவும். வெள்ளை துணி என்றால், ஒரு கப் லேசான துணி ப்ளீச் / வாஷிங் சோடாவை உபயோகப்படுத்தினால் கறை நிச்சயமாக நீங்கிவிடும்.
படிநிலை 7: துணி மென்மையாக்கியைப் பயன்படுத்துங்கள்
இப்போது மற்றொரு வாளி வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் 1 கப் துணி மென்மையாகும் திரவியம் சேர்த்து, துணியை வாளியின் உள்ளே வைத்து 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
படிநிலை 8: தண்ணீரை வடிகட்டவும்
அதன் பிறகு, துணியை வெளியே எடுத்து மெதுவாக பிழிந்து தண்ணீரை வெளியேற்றவும்.
படிநிலை 9: சூரிய ஒளியில் உலர்த்தவும்
துணியை நன்றாக விரித்து, இயற்கையாக உலர, வெயிலில் தொங்க விடுங்கள்.
அவ்வளவுதான்! வெல்லக் கறைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பருத்தி, பாலியஸ்டர், ரேயான் போன்ற துணிகளைக் கழுவவும் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது